×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

நாகப்பட்டினம்,மே8: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வரும் ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரம் வழங்க இருக்கும் நீர் சேகரிக்கும் கிணறு அமைந்துள்ள சருக்கை மற்றும் வாழ்க்கை ஆகிய இடங்களில் நடந்து வரும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பார்வையிட்டார். இந்த பணிகளை திட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள 25.60 லட்சம் லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீருந்து நிலையம் ஆகியவற்றையும், குடிநீர் பணிகளுக்காக நடைபெறும் நீருந்து தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் ஆகிய இடங்களில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டார். தஞ்சாவூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் வசந்தி, நிர்வாக பொறியாளர்கள் முருகேசன், சேகர், ராஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Municipal Executive Director ,Shivarasu ,Jaljeevan ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...